அறுந்து விழுந்த பலகை - ரயிலில் ரத்தம் சொட்ட சொட்ட.. 4 வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்!

Coimbatore Crime Accident
By Vidhya Senthil Oct 18, 2024 06:39 AM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in குற்றம்
Report

  ரயிலில் உள்ள படுக்கை பலகை அறுந்து விழுந்து, 4 வயது சிறுவன் பலத்த காயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

4 சிறுவன் 

கோவை அண்ணா ஆசிரியர் காலணியை சேர்ந்தவர் மேத்யூ. இவரது மனைவி புவிதா(29). அங்குள்ள வங்கியில் மேலாளராகப் பணிபுரிகிறார்.இவருக்கு 4 வயதில் ஜாய்சன் தாமஸ் என்ற மகன் உள்ளார். இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு சொந்த ஊரான தூத்துக்குடிக்கு வந்து விட்டு,

train accident

கோவை செல்வதற்காக நேற்று நாகர்கோவில்-கோவை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்துள்ளார்.அப்போது இரவு 11.40 மணிக்கு புவிதா மகனை கீழடுக்கில் படுக்க வைத்துவிட்டு, அவருக்கான படுக்கையைத் தயார் செய்தபோது, திடீரென மேலடுக்கு படுக்கையைத் தாங்கிப் பிடிக்கும் இரு இரும்புக் கொக்கிகள் அறுந்து விழுந்தது.

தலை இல்லாமல் மிதந்து வந்த பெண் உடல் - அதிர்ந்த சுற்றுலா பயணிகள்

தலை இல்லாமல் மிதந்து வந்த பெண் உடல் - அதிர்ந்த சுற்றுலா பயணிகள்

இதில் கீழே படுத்திருந்த 4 வயது சிறுவன் நெற்றியில் படுக்கைப் பலகை விழுந்து, பலத்த காயம் ஏற்பட்டது. உடனே பணியில் இருந்த பயணச்சீட்டு பரிசோதகரிடம் புவிதா புகார் செய்தார்.

  அதிர்ச்சி சம்பவம்

உடனடியாக சிகிச்சைக்கு ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார்.ஆனால், அங்கு யாரும் வரவில்லை எனக் கூறப்படுகிறது .இதையடுத்து, அதிகாலையில் ரயிலிலிருந்து இறங்கிய புவிதா, ஆட்டோ மூலம் மதுரை அரசு மருத்துவமனைக்குச் சென்றதாக கூறப்படுகிறது .  

4 years boy injured

மேலும் இந்த சம்பவம் குறித்து மதுரை ரயில்வே காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.அப்போது படுகாயமடைந்து 3 மணி நேரத்துக்குப் பிறகே, மகனுக்குச் சிகிச்சை கிடைத்தது. இதற்கு ரயில்வே அதிகாரிகளின் அலட்சியம்தான் காரணம் எனக் குற்றம் சாட்டினார்.