ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 7 வயது சிறுவன்; காப்பாற்றிய சூப்பர் ஹீரோ - வைரலாகும் வீடியோ!
ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 7 வயது சிறுவனை நபர் ஒருவர் காப்பாற்றியுள்ளார்.
போராடிய சிறுவன்
ஜம்மு காஷ்மீர், ஸ்ரீரீநகரில் உள்ள ஜீலம் ஆற்றில் 7 வயது சிறுவன் தவறி விழுந்தார். அவரை தண்ணீர் அடித்துச் சென்றது. அப்போது ஆற்றின் கரையில் நின்று கொண்டிருந்த ஒருவர், சிறுவன் ஆற்றில் அடித்துச் செல்வதைப் பார்த்தார்.
உடனடியாக சிறுவனைக் காப்பாற்ற ஆற்றில் குதித்தார். தண்ணீர் சிறுவனை வேகமாக அடித்துச் சென்ற நிலையிலும், விடாமல் நீச்சலடித்துச் சென்று அவர் காப்பாற்றி கரைக்குக் கொண்டு வந்தார்.
காப்பாற்றிய நபர்
மூச்சுப்பேச்சு இல்லாமல் மயங்கிய நிலையில் இருந்த சிறுவனை, முதுகில் அமுக்கி ஆற்றில் குடித்த நீரை வெளியேற்றியதுடன், அவனுக்கு தனது மூச்சைக் கொடுத்து காப்பாற்றினார்.
#Kashmir: Locals saved 7 year old child after he slipped in river Jhelum river at Safakadal in Srinagar. pic.twitter.com/iaci0p6nC1
— Jammu Kashmir News Network ?? (@TheYouthPlus) May 26, 2024
மேலும், விடாமல் சிறுவனைத் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடினார்.
இதுகுறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதனைப் பார்த்த அனைவரும் அவரை பாராட்டி வருகின்றனர்.