ஆற்றில் கரைக்கப்பட்ட துர்கா சிலை : கொத்து கொத்தாக அடித்து செல்லப்பட்ட மக்கள்

By Irumporai 1 மாதம் முன்

மேற்குவங்கத்தில் ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் மக்கள் அடித்து செல்லப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

துர்கா சிலை ஆற்றில் கரைக்கும் நிகழ்வு

மேற்குவங்கம், ஜல்பைகுரியில் தசரா விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. 10 ஆம் நாளான நேற்று துர்கா தேவியின் சிலைகளை மால் ஆற்றில் கரைக்கும் நிகழ்ச்சியில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டனர்.

ஆற்றில் கரைக்கப்பட்ட துர்கா சிலை : கொத்து கொத்தாக அடித்து செல்லப்பட்ட மக்கள் | 8 Dead Many Missing After Bengal Flash Flood

40 பேர் அடித்து செல்லப்பட்ட சோகம்

அப்போது ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. துர்கா சிலைகளை கரைக்கும் போது ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 40 பேர் அடித்துச் செல்லப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து உடனடியாக மீட்பு படையினர் மற்றும் தீயணைப்பு படையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த மீட்பு படையினர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டவர்களை பத்திரமாக மீட்க தொடங்கினர். இருப்பினும் இந்த மீட்பு பணியில் 8 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். அத்துடன் மாயமான பலரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.