ஏண்டா ஸ்கூல்ல சாப்பிடல? என் Girl Friend.. பெற்ற தாயிடமே பொடியன் சொன்னத பாருங்க!
தாயாருக்கும்-மகனுக்கும் இடையிலாலான ஒரு உரையாடல் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மதிய உணவு
பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு பிடித்த மதிய உணவை சமைத்துக் கொடுத்து சாப்பிட வைப்பதற்குள் தாய்மார்கள் படாத பாடுபடுகிறார்கள். பிடிக்காத உணவை கொடுத்துவிட்டால் நான் மதிய உணவை சாப்பிடவே மாட்டேன் என புறப்படும்போதே சொல்லிவிட்டு செல்வார்கள்.
அந்தவகையில், பிடித்த உணவை சமைத்துக் கொடுத்தும் சிறுவன் ஒருவன் அதை சாப்பிடாமல் அதற்கான காரணத்தை கூறிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தாய் ஒருவர் தனது மகனுக்கு பள்ளியில் சாப்பிடுவதற்கு பிடித்த மதிய உணவை கொடுத்து அனுப்பினார்.
அதனுடன் 'ஐ லவ் யூ பேப்' என எழுதி லஞ்ச் பேக்கில் போட்டிருந்தார். இந்நிலையில் பள்ளி முடிந்து வீடு திரும்பிய சிறுவனின் லஞ்ச் பேகை தயார் சோதனை செய்துள்ளார். அப்போது அதில் கொடுத்து அனுப்பிய உணவு சாப்பிடாமல் அப்படியே இருந்தது.
சிறுவனின் பதில்
இதுகுறித்து சிறுவனிடம், ஏன் மதிய உணவு சாப்பிடவில்லை? என அவர் கேட்டார். அதற்கு அந்த சிறுவன் "என் லஞ்ச் பேக்கில் நீங்கள் ஐ லவ் யூ பேபி என எழுதியிருந்தீர்கள். அதனால்தான் சாப்பிடவில்லை" என்றான்.
இதனால் அதிர்ச்சியடைந்த தாயார், இதற்காக ஏன் நீ சாப்பிடவில்லை? என்று கேட்டார். அப்போது அந்த சிறுவன் "நீங்கள் கொடுத்த லஞ்ச்சை சாப்பிட எடுத்தேன். அதில் நீங்கள் எழுதிய ஐ லவ் யூ பேப் என்ற மெசேஜை பார்த்தேன். அதை என் கேர்ள் பிரண்டும் படித்துவிட்டு சோகம் ஆகிவிட்டாள். அவள் அப்செட் ஆனதால் நான் லஞ்ச்சை சாப்பிடவில்லை" என கூறினான்.
இதனை கேட்டதும் அந்த தாயார் விழுந்து விழுந்து சிரித்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சிறுவனின் மழலைத்தனம் சில நெட்டிசன்களை சிரிக்கவைக்கும்படியாக இருந்தாலும், சிலர் "இந்த வயதிலேயே இப்படியே? என்று கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனனர்.