துடிதுடிக்க உயிரைப் பறித்த ஆக்டோபஸ் - இந்த உணவை சாப்பிடுறதுக்கு முன்னாடி கவனம்!
லைவ் ஆக்டோபஸ் உணவை சாப்பிட்ட முதியவர் பலியாகியுள்ளார்.
லைவ் ஆக்டோபஸ்
தென்கொரியா, குவாங்ஜூ நகரைச் சேர்ந்தவர் 82 வயது முதியவர். இவர் வெவ்வேறு வகையான உணவுகளை உண்பதில் ஆர்வமாக இருந்துள்ளார். அதன்படி, ‛சன்னக்ஜி' எனும் உணவை சாப்பிட முடிவு செய்துள்ளார்.
இது உயிருடன் இருக்கும் ஆக்டோபஸை உப்பு மற்றும் எள் எண்ணெய் உள்ளிட்டவை சேர்த்து பதப்படுத்தி வழங்குவது. ஆக்டோபஸை துண்டாக வெட்டினாலும் கூட, நரம்புகளால் குறிப்பிட்ட நிமிடங்கள் அசைவுகள் இருக்கும்.
முதியவர் மரணம்
இது உயிரோடு ஆக்டோபசை உண்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும். இதனை அவர் சாப்பிட்டபோது தொண்டை பகுதியில் ஆக்டோபஸ் சிக்கிக் கொண்டது.
இதனால் அவர் துடிதுடித்துள்ளார். தொடர்ந்து, மூச்சு திண்றல் ஏற்பட்டு மாரடைப்பால் உயிரிழந்தார். இந்த உணவை சாப்பிடும்போது அவசரம் காட்டமால் நன்கு மென்று சாப்பிட வேண்டும்.
மதுபானம் உள்ளிட்ட போதை பொருட்களை சாப்பிட்டு விட்டு இந்த உணவை எடுக்கக்கூடாது.
உலகிலேயே மிகவும் ஆபத்தான உணவுகளின் பட்டியலில் லைவ் ஆக்டோபஸ் இடம்பெற்றுள்ளது. மேலும், பஃபர் ஃபிஷ், புல் தவளைகள் உள்ளிட்டவை அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.