குற்றால வெள்ளத்தில் பலியான சிறுவன் - வ.உ.சி. கொள்ளுப் பேரன்? வெளியான ஷாக் தகவல்!
குற்றாலம் அருவி வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சிறுவன் வ.உ.சி. கொள்ளுப் பேரன் என தெரியவந்துள்ளது.
பலியான சிறுவன்
வளிமண்டலக் காற்றழுத்த மாறுபாட்டால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.இதனால் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த பலத்த மழையால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மேலும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருத்து மெயின் அருவி ஐந்தருவி மற்றும் பழைய குற்றால அருவிகளில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருக்கிறது.அப்போது, பழைய குற்றால அருவியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் திருநெல்வேலியை சேர்ந்த அஸ்வின் என்ற 17 வயது சிறுவன் வெள்ளத்தில் சிக்கி
வ.உ.சி கொள்ளுப் பேரன்
சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை அடித்துச் செல்லப்பட்டார். அதில் அந்த சிறுவன் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், உயிரிழந்த சிறுவன் அஸ்வின், சுதந்திரப் போராட்ட வீரரான வ.உ.சிதம்பரனாரின் கொள்ளுப் பேரன் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
10ம் வகுப்பு தேர்வு எழுதி, விடுமுறையில் இருந்த சிறுவன் தென்காசி மேலகரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்த சமயத்தில் இந்த அசம்பாவிதம் நடந்துள்ளது. அஸ்வினின் தந்தை குமார் வங்கியில் வேலை பார்த்து வருவதாகவும், தற்சமயம் மகனின் இறப்பு காரணமாக குடும்பத்தினர் சோகத்தில் இருப்பதால்
இது தொடர்பான தகவல் எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை என கூறியுள்ளனர். இருப்பினும் சுதந்திரப் போராட்ட வீரரான வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் கொள்ளு பேரன் என்ன தெரியவந்தது அனைவரிடத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.