ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன்.. 56 மணிநேர போராட்டம் - இறுதியில் நேர்ந்த சோகம்!
ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 5 வயது சிறுவன் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிறுவன்..
ராஜஸ்தானின் தவுசா மாவட்டத்தில் உள்ள காளிகாத் என்ற கிராமத்தை சேர்ந்தவர் ஆர்யன் என்ற 5 வயது சிறுவன். இவர் சில நாட்களுக்கு முன்பு மாலை தனது நண்பர்களுடன் அவரது வீட்டின் அருகே அமைந்துள்ள வயலில் விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கிருந்த கைவிடப்பட்ட 250 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்துள்ளான். . இதனைப் பார்த்து பதறி போன பெற்றோர், மீட்பு படை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
போராட்டம்
அதன்படி அங்கு விரைந்து வந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர் மாலை முதல் சிறுவனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். குழாய் மூலம் ஆக்சிஜன் கொடுத்து சிறுவனுக்கு சுவாசம் கொடுத்து வந்தனர். அதே சமயத்தில்,ஆழ்துளை கிணறு அருகே பள்ளம் தோண்டி சிறுவனை மீட்க முயன்றனர்.
அப்போது, சிறுவன் மீது மண் சரிந்து விழுந்தது. சுமார் 56 மணிநேர போராட்டத்திற்குப் பிறகு, கயிறு மூலம் சுயநினைவில்லாத நிலையில் சிறுவன் மீட்கப்பட்டான். இதையடுத்து, உடனே சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது, பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் 56 மணிநேர போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டப்போதும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.