நீச்சல் குளத்தில் விளையாடிய சிறுவன்..வெளியே மயங்கி விழுந்து திடீர் பலி - ஷாக் வீடியோ!
சிறுவன் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீச்சல் குளத்தில்..
உத்தரபிரதேசம் மாநிலம் மீரட் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுவன் அருகில் உள்ள நீச்சல் குளத்தில் வெகு நேரமாக குளித்து மகிழ்ந்துள்ளார். பிறகு அதிலிருந்து வெளியேறிய அந்த சிறுவன் சில நிமிடங்களில் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
இந்த சம்பவம் பதிவான சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த தகவலறிந்து அங்கு விரைந்து வந்த போலீசார் விசாரணையை நடத்தினர். அதில், சி.சி.டி.வி. காட்சிகள் மூலம் நடத்தப்பட்ட விசாரணையில், அந்த சிறுவன் சிவல்காஸ் பகுதியை சேர்ந்தவன் என்பது தெரிய வந்தது.
சிறுவன் பலி
இதை தொடர்ந்து நீச்சல் குளத்தில் இருந்து வெளியே வந்த சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த அந்த சிறுவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.ஆனால் போகும் வழியிலேயே சிறுவன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
In UP’s meerut a 17-Year-old collapses and dies after coming out of the swimming pool. The teenager played cricket before coming for swimming and after swimming for sometime the boy collapses as soon as he steps out and was later declared dead at the hospital. pic.twitter.com/qIFWLSX8Kz
— Tanishq Punjabi (@tanishqq9) June 21, 2024
இந்த மரணத்திற்கு இதுவரை உறுதியான காரணங்கள் தெரியவில்லை. இந்நிலையில், அந்த நீச்சல் குளத்தை மூடி போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக தீவிர விசாரணையை நடத்தி வருகின்றனர்.