நம்பவைத்து ஏமாற்றிய பெண் வீட்டார்; விரக்தியில் வாலிபர் செய்த காரியம் - அதிர்ச்சி!
காதலித்த பெண்ணுக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்ததால் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
காதல் விவகாரம்
சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (27). இவர் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்துள்ளார்.
இதனிடையே அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று திருமணம் செய்து கொடுக்க பெரியவர்கள் மூலம் பிரகாஷ் கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது வீடு கட்டி முடியுங்கள் பின்னர் பார்க்கலாம் என்று பெண் வீட்டார் கூறியதாக தெரிகிறது. இதனால் சொந்தமாக வீடு கட்டும் பணியில் பிரகாஷ் ஈடுபடத் தொடங்கினார்.
இளைஞர் உயிரிழப்பு
ஆனால், அந்த பெண்ணுக்கு அவரது பெற்றோர் வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த பிரகாஷ் பூச்சிக்கொல்லி விஷ மாத்திரைகளை சாப்பிட்டு வீட்டில் மயங்கி கிடந்தார்.
இதுகுறித்து அறிந்த உறவினர்கள் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி பிரகாஷ் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.