தகாத உறவு: அம்மாகிட்ட பேசாதீங்க..பிடிக்கல - காதலனை தாக்கிய 17 வயது மகன்!

Tiruvannamalai Relationship Crime
By Sumathi Dec 04, 2022 10:59 AM GMT
Report

தாயுடன் பழகிய நபரை சிறுவன் கட்டையால் தாக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

தகாத உறவு

திருவண்ணாமலை, போளூர் அருகே மூலக்காடு பகுதியைச் சேர்ந்தவர் அருள்தாஸ்(45). இவர் அருகே உள்ள பகுதியில் சவுண்டு சர்வீஸ் கடையில் 15 ஆண்டுகளாக வேலை செய்து வருகிறார். இவருக்கும் அந்தப் பகுதியைச் சேர்ந்த தொழிலாளி ஒருவரின் மனைவிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனால் அந்தப் பென் அவரை அடிக்கசி வீட்டிற்கே வரவழைத்து நெருக்கமாக இருந்துள்ளார். 35 வயதான அந்தப் பெண்ணுக்கு 17 வயதில் மகன் ஒருவர் உள்ளார். இந்நிலையில், அந்தச் சிறுவனுக்கு இந்தப் பழக்கம் தெரியவரவே, தாயை கண்டித்துள்ளார்.

தாக்கிய சிறுவன்

மேலும், அருள்தாஸிடமும் ‘என் வீட்டிற்கு வராதீங்க; என் அம்மாக்கிட்ட பேசாதீங்க. எனக்குப் பிடிக்கலை’ என்று தெரிவித்துள்ளார். ஆனால் இதனை கண்டுக்கொள்ளாத இருவரும் தங்களது உறவை தொடர்ந்து வந்துள்ளனர். சம்பவத்தன்று, சிறுவன் வெளியே சென்றிருந்த நிலையில், அருள்தாஸ் வழக்கம்போல் வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்போது திரும்பி வந்த சிறுவன் அவரை வீட்டில் பார்த்த ஆத்திரத்தில் கட்டையை எடுத்து சரமாரியாக தாக்கியுள்ளான். மதுபோதையில் இருந்ததால் அவரால் தப்பிக்க முடியவில்லை. இதனை பார்த்த மக்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

தொடர்ந்து இதுகுறித்து புகாரளிக்கப்பட்டதில், சிறுவன் மீது வழக்கு பதிவுசெய்த போலீஸார், அவனை கைதுசெய்து கடலூர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர்.