நண்பனை போல் பழகி .. பெண்களின் அந்தரங்க புகைப்படங்களை வைத்து மிரட்டிய நபர் கைது!

Coimbatore Sexual harassment
By Irumporai Oct 11, 2022 03:08 AM GMT
Report

யோயோ ஆப் மூலம் போலி ப்ரொபைல் போட்டோ வைத்து பெண்களிடம் பழகி அந்தரங்க புகைப்படங்களை பெற்று மிரட்டி பணம் பறித்த நபரை காவல் துறையினர் கைது செய்தனர்.

புகைப்படத்தை வைத்து மிரட்டல்

கோவை மாநகர சைபர் கிரைம் காவல் துறையினரிடம், கோவையை சேர்ந்த பெண் ஒருவர் ஒரு புகார் மனு அளித்தார். அதில் யோயோ என்ற ஆன்லைன் இணையதள ஆப் மூலம் தன்னுடன் பழகிய ஒரு நபர், தனது அந்தரங்க போட்டோ மற்றும் வீடியோக்களை பெற்று அதை ஆன்லைனில் பரப்பி விடுவேன் எனக் கூறி பணம் பெற்றதாக அப்பெண் தெரிவித்து இருந்தார்.

அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தினார். இந்த புகாரின் பேரில் கோவை மாநகர சைபர் கிரைம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

காவல்துறையினர் விசாரணை

இந்த நிலையில் தொழில் நுட்ப உதவியுடன் கண்காணித்து விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த பரமசிவம் என்ற என்ற நபரை சைபர் கிரைம் காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

நண்பராக பழகி மோசடி

காவல் துறையினர் அவரிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பரமசிவம் யோயோ என்ற ஆன்லைன் இணையதள ஆப் மூலம் அழகிய ஆண்களுடைய புகைப்படத்தை தன்னுடைய புகைப்படமாக ப்ரொபைல் போட்டோவாக வைத்து பெண்களிடம் நண்பராக பழகி உரையாடி வந்தது தெரியவந்தது.

நண்பனை போல் பழகி .. பெண்களின் அந்தரங்க புகைப்படங்களை வைத்து மிரட்டிய நபர் கைது! | Man Arrested Private Photos Of Women

மேலும் பெண்களை நம்ப வைத்து அவர்களுடைய அந்தரங்க போட்டோ மற்றும் வீடியோக்களை பெற்றுக் கொண்டு, அதை ஆன்லைனில் பரப்பி விடுவேன் என்று கூறி மிரட்டி அவர்களிடமிருந்து பணத்தை பெறுவது வழக்கமாக வைத்து இருந்ததும் தெரியவந்தது.

காவல்துறை வழக்கு பதிவு

இதேபோல பல பெண்களை ஏமாற்றி மோசடி செய்து இருப்பதும், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் மூலமும் பெண்களிடம் மோசடி செய்து இருப்பதும் தெரியவந்தது.

நண்பனை போல் பழகி .. பெண்களின் அந்தரங்க புகைப்படங்களை வைத்து மிரட்டிய நபர் கைது! | Man Arrested Private Photos Of Women

இதனைத் தொடர்ந்து பரமசிவம் மீது பெண்கள் வன்கொடுமை சட்டம், தகவல் தொழில்நுட்ப சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.