அன்று நம்பர் 1 பவுலர்; இன்று அக்கவுண்ட்ஸ் மேனேஜர் - தலைகீழான ஆஸ்திரேலியா வீரர் வாழ்க்கை!
நேதன் பிராக்கன் அக்கவுண்ட்ஸ் மேனேஜராக பணியாற்றி வருவது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேதன் பிராக்கன்
ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் நேதன் பிராக்கன். 116 ஒருநாள் போட்டிகளில் விளையாடி அதில் 174 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
டி20 கிரிக்கெட்டில் 19 போட்டிகளில் விளையாடி 19 விக்கெட்டுகளையும், 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 12 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருக்கிறார். 2001 முதல் 2009 வரை ஆஸ்திரேலியா அணிக்காக தொடர்ந்து விளையாடியவர்.
அக்கவுண்ட்ஸ் மேனேஜர்
ஐசிசி ஒருநாள் போட்டி பவுலர்களுக்கான தரவரிசையில் நம்பர் 1 இடத்தை பிடித்திருந்தார். அவருக்கு ஏற்பட்ட காயம் தான் பிராக்கனுக்கும் சிக்கலை ஏற்படுத்தியது. அந்த காயத்தில் இருந்து மீண்டு வந்த போதும், அவரால் பழைய மாதிரி சிறப்பாக செயல்பட முடியவில்லை.
தொடர்ந்து, 2011ஆம் ஆண்டு ஆர்சிபி அணிக்காக விளையாட ரூ.1.4 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு பிராக்கன் வரவில்லை. பின், கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார்.
தற்போது நியூ சவுத் மேல்ஸ் பகுதியில் உள்ள நிறுவனத்தில் அக்கவுண்ட்ஸ் மேனேஜராக பணியாற்றி வருகிறார். இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.