ராகுல் காந்தியை பார்த்தே ஆகணும்.. கார் முன்னே பாய்ந்த தொண்டர்கள் - தூக்கி வீசிய பவுன்சர்ஸ்!
எம்.பி ராகுல் காந்தி வந்ததும் அவரை பாக்க முயன்ற தொண்டர்களால் பரபரப்பு சூழல் நிலவியது.
விமான நிலையத்திற்கு வருகை
காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி பல இன்னல்களுக்கு பிறகு மீண்டும் தனது எம்.பி பதவியை பெற்றுள்ளார். தற்பொழுது இரண்டு நாள் பயணமாக வயநாடு செல்லும் ராகுல் காந்தி அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இருக்கிறார்.
இதற்காக இன்று காலை ராகுல் காந்தி இண்டிகோ விமானம் மூலம் டெல்லியில் இருந்து கோவை விமான நிலையம் வந்தார். அங்கிருந்து சாலை வழியாக ஊட்டி சென்று பிறகு வயநாடு செல்கிறார். கோவையில் ராகுல் காந்திக்கு உற்சாகமான வரவேற்பு அளித்தனர்.
அவர் விமான நிலையத்தில் இருந்து செல்லும் வழியில் இவரது தொண்டர்கள் இவரை பார்ப்பதற்காக கார் முன்னே வந்தனர், அவர்களை தடுத்து பவுன்சர்கள் வழி அமைத்து சென்றனர்.
தள்ளிய பவுன்சர்கள்
இந்நிலையில், காரில் செல்லும் போது முன்பக்கம் அமர்ந்திருந்த ராகுல் காந்தி தன்னை வரவேற்ற தொண்டர்களைப் பார்த்து உற்சாகமாக கை அசைத்துக் கொண்டிருந்தார். அப்பொழுது தொண்டர்கள் சிலர் காரின் அருகில் சென்று ராகுல் காந்திக்குக் கையை கொடுக்க முயன்றனர்.
உடனே பவுன்சர்கள் அவர்களைத் தடுத்துத் தள்ளி விட்டனர். இதில் சிலர் நிலைதடுமாறி கீழே விழுந்தனர், பல தொண்டர்கள் ராகுல் அருகே வர முயன்றனர். அப்போது சில பாதுகாப்பு வீரர்கள் அவர்களை அருகில் வர விடாமல் தடுத்தனர். மேலும், ராகுல் காந்திக்கு அருகில் வர முயன்ற தொண்டர்களை வீரர்கள் தள்ளிவிட்டதால் பரபரப்பு சூழல் நிலவியது.