34 வருஷமா கடலில் மிதந்த பாட்டில்; பாதுகாக்கப்பட்ட கடிதம் - சுவாரஸ்ய நிகழ்வு!
கடற்கரை ஓரமாக கிடைத்த பிளாஸ்டிக் பாட்டில் குறித்த தகவல் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிளாஸ்டிக் பாட்டில்
கனடா நாட்டைச் சேர்ந்தவர் ட்ரூடி ஷாட்லர் மெக்கின்னோன். இவர் சமீபத்தில் பேஸ்புக்கில் ஒரு பதிவை வெளியிட்டார். அதில், தான் ஒரு கடற்கரை வாசி. சமீபத்தில் தனக்கு கடற்கரை ஓரமாக ஒரு பிளாஸ்டிக் பாட்டில் கிடைத்ததாகவும், அந்த பாட்டிலினுள் ஒரு செய்தி இருந்ததாகவும் தெரிவித்தார்.

மேலும், “ஒரு செய்தியுடன் கூடிய ஒரு பிளாஸ்டிக் பாட்டிலை நான் கண்டெடுத்தேன். போர்ட் ஆக்ஸ் சாய்ஸில் உள்ள ஃபாக்ஸ் பாயிண்டில் இருந்து பத்து மயிலுக்கு அப்பால் உள்ள தண்ணீரில் இந்த பாட்டில் வீசப்பட்டதாக அதில் எழுதியிருந்தது. அந்த செய்தி 29 மே, 1989 இல் எழுதப்பட்டது ஆகும்.
34 வருடம்
இந்த பாட்டில் 34 ஆண்டுகள் மற்றும் ஒரு வாரம் தாக்குபிடித்து தண்ணீருக்குள் இருந்துள்ளது. அந்த பாட்டிலை தண்ணீருக்குள் போட்ட நபர் கூற வருகின்ற விஷயத்தை கேட்க நான் ஆவலாக உள்ளேன். நான் ஒரு ப்ரொபஷனல் பீச் கோம்பர்.

இது போன்ற செய்திகள் நிரப்பப்பட்ட பாட்டிலை கண்டுபிடிக்க நான் எப்பொழுதும் ஆர்வமாக இருந்துள்ளேன்” என எழுதியிருந்ததாக குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து, “பாட்டிலின் சொந்தக்காரரை நாங்கள் கண்டுபிடித்து விட்டோம். அவர் போர்ட் ஆக்ஸ் சாயிக்ஸ் என்எஃப்எல்டி-ஐ சேர்ந்த கில்பெர்ட் ஹாம்லின் என்பவர் ஆவார்.
ஆச்சர்ய நிகழ்வு
துரதிஷ்டவசமாக கில்பெர்ட் 2 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். அவரது மகன் என்னை அணுகி கில்பெர்ட் தனது தந்தைதான் என்பதை என்னிடம் உறுதி செய்தார். என்னுடைய இந்த பதிவை அனைவரிடமும் பகிர்ந்த ஒவ்வொருவருக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இதன் மூலமாக 34 வருடங்கள் கடலில் இருந்த இந்த பாட்டில் தற்போது அதன் சேரும் இடம் திரும்பி விட்டது” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த தகவல் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.