56 வயதில் 8-வது குழந்தைக்கு அப்பாவாகும் முன்னாள் பிரதமர்..!

Boris Johnson
By Vinothini May 20, 2023 10:29 AM GMT
Vinothini

Vinothini

in உலகம்
Report

பிரிட்டனின் முன்னாள் பிரதமருக்கு 8வது குழந்தை கூடிய விரைவில் பிறக்க இருக்கிறது என்று அவரது மனைவி சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

முன்னாள் பிரதமர்

பிரிட்டனின் முன்னாள் பிரதமராக இருந்த போரிஸ் ஜோன்சன் 2015 முதல் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வந்தார், பின்னர் 2019 முதல் 2022 வரையில் பிரிட்டனின் பிரதமராகவும் சேவை செய்துள்ளார்.

boris-johnsons-wife-pregnant

தொடர்ந்து, இவரது முன்னாள் மனைவி மெரினா வீலர் என்பவருடன் நான்கு பிள்ளைகள் உள்ளனர்.

2009ல் Helen Macintyre என்பவருடன் ஏற்பட்ட நெருக்கத்தால் போரிஸ் ஜோன்சனுக்கு Stephanie என்ற மகள் உள்ளார்.

8வது குழந்தை

இந்நிலையில், இவருக்கு கடந்த ஆண்டு மே 2021-ல் கேரி என்பவருடன் திருமணம் ஆகி ஏற்கனவே ரோமி என்ற ஒரு வயது மகளும், வில்பிரட் என்ற மூன்று வயது மகனும் உள்ளனர்.

boris-johnsons-wife-pregnant

தற்போது கேரி ஜோன்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்துள்ளார்.

மேலும், போரிஸ் ஜோன்சனுக்கு 56 வயது ஆகிய நிலையில் இவர் தனது 8வது குழந்தைக்கு தந்தை ஆவது குறித்து சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.