60 வயதில் 9ஆவது குழந்தைக்கு தந்தையான போரிஸ் ஜான்சன்
போரிஸ் ஜான்சன் ஒன்பதாவது முறையாக தந்தையானார்.
போரிஸ் ஜான்சன்
முன்னாள் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன். இவர் கேரி என்பவரை 3வதாக 2021ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு தற்போது நான்காவது குழந்தை பிறந்துள்ளது.
தங்கள் மகள் பாப்பி எலிசா ஜோசஃபின் ஜான்சனின் பிறப்பை இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ளார். அதில், “பாப்பி மிகவும் அழகாகவும் சிறியவளாகவும் இருக்கிறாள், நாங்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளோம்” என்று போரிச் ஜான்சன் குறிப்பிட்டுள்ளார்.
9வது குழந்தை
அவரது முதல் திருமணம் அலெக்ரா மோஸ்டின்-ஓவனுடன் (1987-1993) நடைபெற்றது. இந்தத் திருமணத்தில் அவருக்கு குழந்தைகள் இல்லை. பின், 1993-ஆம் ஆண்டு மெரினா வீலருடா என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு லாரா, மிலோ, காசியா, மற்றும் தியோடர் என்ற நான்கு குழந்தைகள் உள்ளனர்.
2020-ஆம் ஆண்டு மெரினா வீலருடாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றுக்கொண்டார்கள். தொடர்ந்து, கேரி ஜான்சன் என்பவரை 2021-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
ஏற்கனவே வில்ஃப்ரெட், ரோமி, ஃப்ராங்க் என்ற 3 குழந்தைகள் இவர்களுக்கு உள்ளது. மொத்தமாக 9-வது முறையாக தந்தையாகியுள்ள போரிஸ் ஜான்சனுக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.