பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்தார்... - வெளியான அதிகாரப்பூர்வ தகவல்

Boris Johnson
By Nandhini Jul 07, 2022 11:44 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

லண்டன் நாட்டை வழிநடத்தும் பொறுப்பில் இருக்கும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் மீது தங்களுக்கு இனி நம்பிக்கை கிடையாது என்று கூறி அந்நாட்டு நிதியமைச்சர் ரிஷி சுனக்கும், சுகாதார அமைச்சர் சாஜித் ஜாவித்தும் தங்களுடைய பதவியிலிருந்து விலகினார்கள்.

இதன் காரணமாக, போரிஸ் ஜான்சனுக்கு அரசியல் அழுத்தம் அதிகரித்து வந்தது. இதற்கிடையே, கடந்த 48 மணி நேரத்தில் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் என 54 பேர் திடீரென தொடர்ந்து ராஜினாமா செய்திருக்கிறார்கள்.

Boris Johnson

போரிஸ் ஜான்சன் ராஜினாமா

இதைத் தொடர்ந்து இன்று பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியானது. இதனையடுத்து, அவர் இடைக்கால பிரதமராக நீடிப்பார் என்றும், அக்டோபரில் நடைபெறும் கட்சி மாநாட்டில் புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற தகவல்களும் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போரிஸ் ஜான்சனின் ராஜினாமா பேச்சு நேரம், அவர் இறுதியாக சொந்தக் கட்சியால் வெளியேற்றப்பட்டார் என்ற தகவல் வெளியானது.

போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்தால் டாலருக்கு எதிராக பவுண்ட் உயர்வும் என்ற தகவலும் வெளியானது. இந்நிலையில், போரிஸ் ஜான்சனின் ராஜினாமா செய்வதாக அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதனால் இங்கிலாந்து அரசியலில் மாற்றங்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 

நடிகர் விஷாலுக்கு விரைவில் கல்யாணம்...? - பொண்ணு யார் தெரியுமா? அவரே சொன்ன விஷயம்