நீங்கள் அதிக புத்தக வாசிப்பு பழக்கம் உள்ளதா? ஆராய்ச்சியில் வெளியான தகவல்!
வாசிப்பு பழக்கம் உள்ளவர்களுக்கு என்ன பலன்கள் கிடைக்கும் என்று இந்த பதிவில் காணலாம்.
வாசிப்பு பழக்கம்
ஸ்மார்ட் போன், ஏஐ, இண்டர்நெட் என உலகமே அதிவேகமாக வளர்ந்து வருகின்ற நேரத்தில், புத்தகம் வாசிக்கும் பழக்கம் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. புத்தகம் படிக்க நினைத்தால் கூட பெரும்பாலானோர் போனில் தான் வாசிக்கின்றனர்.
ஏனென்றால் ஒரு இடத்தில் அமர்ந்து தன்னை அர்பனித்து வாசிக்கும் வழக்கம் இப்போதெல்லாம் யாருக்கும் நேரமில்லை. இந்த சூழலில், வாசிப்பு பழக்கம் உள்ள இளையோரின் மூளை சிறப்பாக செயல்படுவதாக சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
ஆராய்ச்சி
அதாவது, மூளையின் செயல்படும் அமைப்பும் மாறுபடுவதாகக் கூறப்படுகிறது. The Reading Agency என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில், வாசிப்போர் எண்ணிக்கை அண்மைக்காலங்களில் குறைந்து வருவதாக தெரியவந்துள்ளது.
இருப்பினும், வாசிப்பு பழக்கம் உள்ளவர்கள் மற்றும், வாசிப்பு பழக்கம் இல்லாதவர்கள் மத்தியில் நடத்தப்பட்ட ஆய்வில், வாசிப்பு பழக்கம் உள்ளவர்களின் மூளை சிறப்பாக செயல்படுவதாக தெரியவந்தது. இந்த நிலையில், மூளையின் கோர்டெக்ஸ் என்ற அமைப்பிலேயே மாற்றம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த அமைப்புதான் ஞாபகத் திறன், புரிந்துணர்வு உள்ளிட்டவைகளை சேகரித்து வைக்கும் பகுதி என்பதால், வாசிப்பு பழக்கம் உள்ளவர்கள் இந்த செயல்பாடுகளில் திறன் வாய்ந்தவர்களாக இருப்பார்கள் என்று தெரியவந்துள்ளது.