48 வயதில் 500 நாட்கள் குகையிலேயே தனிமை வாழ்க்கை - பெண் புதிய சாதனை
500 நாட்களை குகையில் கழித்து பெண் ஒருவர் புதிய சாதனை படைத்துள்ளார்.
குகை வாழ்க்கை
ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்-ஐ சேர்ந்தவர் 50 வயதான ஃப்ளமினி. இவர் Time cave பரிசோதனைக்காக தெற்கு ஸ்பெயினில் உள்ள குகை ஒன்றிற்குள் 2021ம் ஆண்டு நவம்பர் 21ம் தேதி அனுப்பப்பட்டார். 230 அடி ஆழத்தில் குகைக்குள் வாழ்ந்த அனுபவங்களை ஒவ்வொரு நாளும் கேமராக்கள் பயன்படுத்தி முழுமையாக வீடியோ பதிவு செய்துள்ளார்.
தனது 48ஆவது வயதில் குகைக்குள் சென்ற இவர் இரு பிறந்தநாளை குகைக்குள்ளேயே கொண்டாடியுள்ளார். உக்ரைன்-ரஷ்யா போர், உலகக் கோப்பை கால்பந்து போட்டி, துருக்கி நிலநடுக்கம் போன்ற முக்கிய சம்பவங்கள் எதுவும் தெரியாதபடி வாழ்ந்துள்ளார்.
புதிய சாதனை
உளவியலாளர்கள், உடற்பயிற்சியாளர்கள், குகை ஆய்வாளர்கள் என பலரின் கண்காணிப்பில் இருந்தாலும், 500 நாட்கள் வரை யாருடனும் நேரடி தொடர்பு இல்லாமல் புத்தக வாசிப்பு, ஓவியம் வரைதல், உடற்பயிற்சி என பொழுதுபோக்கியுள்ளார். தற்போது, வெற்றிகரமாக இலக்கை நிறைவு செய்து வெளியே வந்துள்ளார்.
முதல் வேலையாக குளிக்கப்போவதாக தெரிவித்துள்ளார். செர்பியர் ஒருவர் 2016ல் 460 நாட்களை குகையில் நிறைவு செய்ததே சாதனையாக இருந்த நிலையில் அதனை இவர் முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.