புத்தக காதலர்களே.. சென்னை புத்தக கண்காட்சி தேதி அறிவிப்பு - முழு விவரம் இதோ..
புத்தகக் காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
புத்தகக் காட்சி
சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 47ஆவது புத்தகக் காட்சி ஜனவரி 3ல் தொடங்கி 21ம் தேதி வரை நடைபெறவுள்ளது. விடுமுறை நாளில் காலை 11 மணி முதல் இரவு 8.30மணி வரையும்,
வேலை நாட்களில் பிற்பகல் 2மணி முதல் இரவு 8.30 மணி வரையும் புத்தகக் காட்சி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து பதிப்பகத்தின் புத்தகங்களும் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விவரம்
சிறப்பு தள்ளுபடி விலையில் புத்தகம் விற்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 19 நாட்கள் நடைபெறும் இந்த புத்தகக் கண்காட்சியில் நாள்தோறும் மாலை நடைபெறும் சிந்தனை அரங்கில் அறிஞர்கள், எழுத்தாளர்கள் எனப் பல்துறை ஆளுமைகள் உரையாற்ற உள்ளனர்.
சென்னை புத்தக கண்காட்சி தொடக்க விழாவை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்து கொள்கிறார்.