டாய்லெட் பிரேக் போகலனா.. எக்ஸ்ட்ரா மார்க்ஸ்.. குழந்தைகளை டார்ச்சர் செய்யும் கறார் ஆசிரியை!
கழிவறை பிரேக் எடுக்காத குழந்தைகளுக்கு மதிபெண்கள் என்ற விதி பேசுபொருளாக மாறியுள்ளது.
டாய்லெட் பிரேக்
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இயங்கி வரும் பள்ளி ஒன்றில் கணக்கு ஆசிரியை மாணவர்கள் கழிவறை செல்ல இடைவேளை எடுத்துக்கொள்ளாமல் இருக்க போனஸ் மதிப்பெண்கள் வழங்கி ஊக்குவித்த கொடுமை நடந்துள்ளது.
இது குறித்து அங்கு பயின்று வந்த சிறுமியின் தாய் சமூக வளைத்ததில் பதிவிட்டதை அடுத்து இந்த விவகாரம் வைரலாகி வருகிறது. இந்திய உட்பட இலகம் முழுவதும் கல்வியானது அறிவை வளர்ப்பதை விட மதிப்பெண்களைத் தேடி ஓடும் ரேசாக உள்ளது.
அந்த வகையில், மதிப்பெண்களை பெறுவதற்காக இயற்கை உபாதையையும் குழந்தைகள் அடக்கிக்கொள்ளும் அவலம் நிகழ்ந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து அந்த பள்ளியில் பயிலும் ஒரு குழந்தையின் தாய் வெளியிட்ட பதிவில், எனது மகளின் கணக்கு ஆசிரியை ஒரு வினோதமான டாய்லட் பாலிசி வைத்திருக்கிறார்.
கறார் ஆசிரியை
அதன்படி வாரத்துக்கு ஒரு நாள் மட்டுமே பள்ளியில் குழந்தைகளை பாத்ரூம் போக அவர் அனுமதிக்கிறார், அதன்படி பாத்ரூம் போகாமல் வகுப்பறையிலேயே இருந்து பாடத்தைக் கவனிக்கும் குழந்தைகளுக்கு அவர்அகாடெமிக் பாயிண்ட்ஸ் எனப்படும்,
குழந்தைகள் படிக்கும் தரத்தை நிர்ணயிக்கும் மதிப்பெண்களை போனசாக வழங்குகிறார்' என்று சமுக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் இது தொடர்பாக பிரின்சிபலுக்கு புகார் தெரிவித்து மெயில் அனுப்பியதற்கு தனது மகள் தன்னிடம் கோபித்துக்கொள்ளும்,
அளவுக்கு அவ்விஷயம் நார்மலைஸ் ஆக்கப்பட்டுள்ளதாக அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், இந்த விவகாரம் தற்போது சமூக வலைத்தளங்களில் பேசுப்பொருளாக மாறியுள்ளது.