தல பிறந்தநாளில் 'வலிமை' ஃபர்ஸ்ட் லுக் - போனி கபூர் வெளியிட்ட அப்டேட் - குஷியில் ரசிகர்கள்!
நேர்கொண்ட பார்வை’ படத்தின் வெற்றியை அடுத்து தல அஜித், ஹெச்.வினோத், போனிகபூர் மீண்டும் கூட்டணியில் இணைந்துள்ள திரைப்படம்தான் 'வலிமை'. இப்படம் அஜித்திற்கு 60வது படமாகமாகும். இப்படத்தில் அஜித் ஈஸ்வரமூர்த்தி ஐபிஎஸ் என்ற காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஜோடியாக 'காலா' பட நடிகை ஹீமோ குரோஷி நடித்திருக்கிறார்.
இந்நிலையில் அஜித் ரசிகர்களை ஆசையை நிறைவேற்றும் விதமாக 'வலிமை' ஃபர்ஸ்ட் லுக் குறித்து தகவலை போனி கபூர் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியிட்டிருக்கிறார். அஜித் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் விதவிதமாக ஹேஷ்டேக்குகளை ட்ரெண்ட் செய்து அப்டேட் கேட்டு வந்து கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் சூப்பர் அப்டேட் கொடுத்துள்ளார் போனி கபூர். இதனால் தல ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். தல ரசிகர்கள் வலிமை அப்டேட்காக செய்த அட்டகாசத்தை கொஞ்சம் நஞ்சமல்ல. பிரச்சாரத்திற்கு சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திருச்செந்தூர் முருகன், பாரத பிரதமர் மோடி என பலரிடமும் வலிமை அப்டேட் கேட்டு கூச்சலிடும் வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி சமூகவலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.
சமீபத்தில் கூட சேப்பாக்கம் மைதானத்தில் வலிமை அப்டேட் கேட்டு தல அஜித் ரசிகர்கள் கூச்சல் போட்டது சோசியல் மீடியாவில் பல விமர்சனங்களை உருவாக்கின. இதனை தொடர்ந்து பொறுமை இழந்த அஜித், ரசிகர்கள் பொறுமை காக்கும் படி அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
தற்போது அஜித்தின் 50-வது பிறந்தநாளை முன்னிட்டு மே 1-ம் தேதி ‘வலிமை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் புரமோஷன் பணிகள் தொடங்க இருப்பதாக அந்தப் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்திருக்கிறார்.
இதன் மூலம் மே மாதம் முழுவதும் ‘வலிமை’ குறித்து அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என்று கூறியுள்ளார். இதனால் தல ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.