வலிமை அப்டேட்: விரைவில் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்படும் என போனி கபூர் அறிவிப்பு

ajith flim valimai first look
By Jon Feb 15, 2021 12:11 PM GMT
Report

நடிகர் அஜித் நடித்து வரும் வலிமை திரைப்படம் பல்வேறு காலங்கள் வெளியிடப்படுவது தாமதமானது. இதனால் அவரின் ரசிகர்கள் வலிமை படம் தொடர்பான அப்டேட் வேண்டும் என சமூக ஊடகங்களில் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். கொரோனா முடக்கத்தால் தாமதமான வலிமை படப்பிடிப்பு விரைவில் முடிவுக்கு வரும் என சொல்லப்பட்டு வந்தது.

இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் வலிமை படம் தொடர்பான அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார். போனி கபூர், ட்விட்டரில் இன்று தெரிவித்ததாவது: வணக்கம். வலிமை படத்துக்காக நீங்கள் காண்பித்து வரும் ஆர்வத்துக்கு மகிழ்ச்சி. வலிமை முதல் பார்வை போஸ்டரை விரைவில் வெளியிடவுள்ளதால் சற்று பொறுமையாக இருக்கவும் என்று கூறியுள்ளார்.