நானா ஸ்ரீதேவி'ய கொன்றேன்..? கலங்கவைத்த அந்த சோதனை.. போனி கபூர் வேதனை..!

Sridevi Tamil Cinema Boney Kapoor Tamil Actress
By Karthick Oct 03, 2023 07:26 AM GMT
Report

நடிகை ஸ்ரீதேவியின் மரணம் குறித்து அவரின் கணவரும் தயாரிப்பாளரும் போனி கபூர் முதல் முறை மனம்திறந்துள்ளார்.

ஸ்ரீதேவி

ஒரே காலகட்டத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழி படத்துறையிலும் ஈடு இணையற்ற நடிகையாக வளம் வந்தவர் ஸ்ரீதேவி. அழகு மட்டுமின்றி, நடிப்பு திறமையையும் சிறப்பாக வெளிப்படுத்திய ஸ்ரீதேவி பல தரப்பட்ட ரசிகர்களை கவர்ந்தார். மொத்தமாக 270க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ஸ்ரீதேவி 74 தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார்.

boney-kapoor-opens-up-about-sridevi-death

ரஜினி,கமல் என பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்த ஸ்ரீதேவி, கடந்த 1996ம் ஆண்டு பிரபல இந்த தயாரிப்பாளர் போனி கப்பூரை திருமணம் செய்து கொண்டார். கடந்த 2018ம் ஆண்டு தனது 54ம் வயதில் மர்மமான முறையில் ஸ்ரீதேவி இறந்தார். அவர் குளியல் தொட்டியில் விழுந்து இறந்ததாகக் கூறப்படுகிறது.

இன்சூரன்ஸ் பணத்திற்காக கொல்லப்பட்டாரா ஸ்ரீதேவி? பிரபலம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

இன்சூரன்ஸ் பணத்திற்காக கொல்லப்பட்டாரா ஸ்ரீதேவி? பிரபலம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

காரணம் இது தான்

இந்நிலையில், முதற்முறையாக நடிகை ஸ்ரீதேவியின் மரணம் குறித்து அவரது கணவரும் பிரபல தயாரிப்பாளருமான போனி கபூர் மனம் திறந்துள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டியில், என்னுடைய மனைவியை நானே கொன்றேன் என்று வாய் கூசாமல் பேசினார்கள் என வருத்தப்பட்ட அவர், இது குறித்து பேச வேண்டாம் என்றே இத்தனை ஆண்டுகள் அமைதியாக இருந்ததை குறிப்பிட்டு, இதே கேள்வியை துபாய் போலீசாரும் சுமார் 48 மணி நேரம் என்னிடம் கேட்டு விசாரணை நடத்தினர் என்று கூறினார்.

அத்துடன் நில்லாமல், என்னிடம் உண்மை கண்டறியும் சோதனையையும் நடத்தினர்கள் என கூறிய போனி கபூர், அப்போது என் மனம் பட்ட வேதனை எனக்கு மட்டும் தான் தெரியும் என்று, அதன் ரிசல்ட் வந்த பின்னர் தான், இது திட்டமிட்ட கொலை அல்ல என்றும் ஒரு எதிர்பாராத விபத்து என்றும் முடிவு செய்தனர் என்றார்.

boney-kapoor-opens-up-about-sridevi-death

தனது உடம்பை எப்போதுமே ஸ்லிம்மாக வைத்துக் கொள்ளும் மனநிலையில், பல வேளைகள் உணவு உண்ணாவதை தவிர்த்து விடும், ஸ்ரீதேவி அப்படி மயங்கி விழ அதுவே காரணம் என்றும் ஸ்ரீதேவிக்கு Low Bp இருந்தது என்றும் மருத்துவர்கள் சொன்ன ஆலோசனைகளையும் அவர் மதிக்கவில்லை என அந்த பேட்டியில் போனி கபூர் தெரிவித்துள்ளார்.