தனுஷ் கூடவா.. வேண்டவே வேண்டாம் - மகளுக்கு கண்டிஷன் போட்ட போனி கபூர்?

Dhanush Janhvi Kapoor
By Sumathi Sep 09, 2023 03:00 PM GMT
Report

போனி கபூர் தன் மகளை தனுஷ் படத்தில் நடிக்க அனுமதிக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

ஜான்வி கபூர் 

மறைந்த நடிகை ஸ்ரீதேவி - தயாரிப்பாளர் போனிகபூரின் மூத்த மகளான ஜான்வி கபூர் தற்போது பாலிவுட்டில் இளம் நடிகையாக வலம் வருகிறார். தனது கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க கூடிய படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.

தனுஷ் கூடவா.. வேண்டவே வேண்டாம் - மகளுக்கு கண்டிஷன் போட்ட போனி கபூர்? | Boney Kapoor Not Allowing Janvi Act With Dhanush

விதவிதமான ஹாட் உடைகளில் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பார். இந்நிலையில், மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில்,

அப்பா கண்டிஷன்?

“ரொம்ப நாள் ஜான்வி கபூர் தமிழில் நடிக்க வேண்டும் என்று நினைத்தார். அவர் அறிமுகமாக இருப்பதாக ரொம்ப நாட்களாக சொல்லப்படுகிறது. அவரின் தாய் 70ஸ், 80ஸ் காலக்கட்டத்தில் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார்.

தனுஷ் கூடவா.. வேண்டவே வேண்டாம் - மகளுக்கு கண்டிஷன் போட்ட போனி கபூர்? | Boney Kapoor Not Allowing Janvi Act With Dhanush

ஜான்வி கபூருக்கு தமிழ் ரசிகர்கள் மற்றும் தமிழ் திரையுலகம் மீது மகிப் பெரிய பற்று இருக்கிறது. நிறைய தமிழ் படங்களை எல்லாம் அவர் பார்க்கிறார். நடிகர் தனுஷ் பாலிவுட், ஹாலிவுட் வரை சென்றுவிட்டார். ஆனால் அப்படிப்பட்ட நடிகருடன் ஏன் போனி கபூர் தன் மகள் நடிக்க கூடாது என சொன்னார் என தெரியவில்லை.

உள் இருக்கும் விஷயம் பற்றி தெரியவில்லை. விஜய், அஜித் போன்ற பெரிய நடிகர்களின் படங்களில் தன் மகளை அறிமுகம் செய்து வைக்க நினைக்கிறார் என சொல்கிறார்கள் “ எனத் தெரிவித்துள்ளார்.