முதல்வர் வெளிநாடு பயணம்..புறப்பட்ட விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் - பரபரப்பு சம்பவம்!
முதல்வர் ஸ்டாலின் பயணித்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
வெடிகுண்டு மிரட்டல்
தமிழ்நாட்டிற்குத் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றுள்ளார். அமெரிக்கா, சான்பிரான்சிஸ்கோ செல்லும் முதலமைச்சர், அங்கு முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்கிறார்.
இதனைத் தொடர்ந்து ஆக.31 ஆம் தேதி புலம்பெயர் தமிழர்களுடன் சந்திப்பு நடைபெற உள்ளது . இந்த நிலையில், மு.க. ஸ்டாலின் பயணித்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் அதிகாரிகள் பதற்றமடைந்தனர்.
பரபரப்பு சம்பவம்
அவர் பயணித்த விமானம் புறப்பட்ட பிறகே வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சலை அதிகாரிகள் பார்த்ததாக கூறப்படுகிறது. விமானம் புறப்பட்டு விட்டதால் துபாயில் இறங்கும் வரை 4 மணி நேரம் உச்சக்கட்ட பதற்றத்துடன் அதிகாரிகள் இருக்க நேர்ந்தது.
இந்த சூழலில், துபாய் வழியாக அமெரிக்கா செல்லும் முதல்வர் மு.க. ஸ்டாலின் பயணித்த விமானம் பாதுகாப்பாக அங்கு தரையிறங்கியது. விமானம் தரையிறங்கிய பிறகே வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது உறுதி செய்யப்பட்டதால் அதிகாரிகள் நிம்மதி அடைந்தனர்.