மின்னஞ்சல் மூலம் வந்த குறுஞ்செய்தி.. அவசர அவசரமாக தரையிறங்கிய முதலமைச்சர் விமானம்!
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பயணித்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முதலமைச்சர்
தமிழ்நாட்டிற்குத் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமீரகம் விமானம் மூலம் நேற்று இரவு அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். அமெரிக்காவில் மொத்தம் 17 நாட்கள் தங்கும் முதலமைச்சர் சான்பிரான்சிஸ்கோ, சிகாகோ என அங்கு நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்கிறார்.
இதனைத் தொடர்ந்து செப்டம்பர் 12ஆம் தேதி வரை சிகாகோவில் தங்கும் முதலமைச்சர், 'ஃபார்ச்சூன் 500' பட்டியலில் உள்ள நிறுவன அதிகாரிகள், கூகுள் CEO சுந்தர் பிச்சை ஆகியோரைச் சந்தித்து உரையாடுகிறார்.
வெடிகுண்டு மிரட்டல்
இந்த மாநாட்டின் போது, தொழில் தொடங்கத் தமிழ்நாட்டிற்கு வரும்படி முதலீட்டாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுப்பதுடன் முக்கிய முதலீடுகளுக்கான ஒப்பந்தங்களும் கையெழுத்தாக உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் மின்னஞ்சல் மூலம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பயணித்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் துபாயில் அவசர அவசமாகத் தரையிறக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் விமானத்தைச் சோதனை செய்தனர். அதன் பிறகு வெடிகுண்டு மிரட்டல் வதந்தி என்பது உறுதி செய்யப்பட்டதால் அதிகாரிகள் நிம்மதி அடைந்தனர்.