ஐபிஎல் நடத்தினால் ரத்த ஆறு ஓடும் - சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளது.
பயங்கரவாத தாக்குதல்
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக வான்பரப்பு மூடல், சிந்துநதி ஒப்பந்தம் ரத்து, பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. தொடர்ந்து இந்திய ராணுவம் பாகிஸ்தானின் தீவிரவாத முகாம்கள் மீது `ஆபரேஷன் சிந்தூர்` என்ற பெயரில் அதிரடி தாக்குதலை நடத்தியது.
வெடிகுண்டு மிரட்டல்
இந்த தாக்குதலில் 26 தீவிரவாதிகள் உயிரிழந்ததாகவும், 60க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியது.
இந்நிலையில், ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடத்தினால் ரத்த ஆறு ஓடும். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது என பாகிஸ்தான் பெயர் கொண்ட மின்னஞ்சலில் மிரட்டல் வந்துள்ளதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து மைதானத்தில் பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், ஒரு வார காலத்திற்கு ஐபிஎல் போட்டிகள் நிறுத்தி வைக்கப்படுவதாக ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.