நடுவானில் பறந்த ஏர் இந்தியா விமானத்திற்கு வந்த அழைப்பு - அலறிய பயணிகள்!
மும்பையிலிருந்து கேரளாவிற்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்திற்கு நடுவானில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை
மும்பை விமான நிலையத்திலிருந்து, 135 பயணிகள் மற்றும் பணியாளர்களுடன் ஏஐ 657 என்ற ஏர் இந்தியா விமானம் அதிகாலை 5.45 மணிக்கு,கேரளாவிற்கு புறப்பட்டது.விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்த போது வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
விமானி திருவனந்தபுரத்தில் உள்ள விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுப் பிரிவுக்கு தகவல் அளிக்கப்பட்டது .
வெடிகுண்டு மிரட்டல்
இதனையடுத்து காலை 7.36 மணிக்கு ஏர் இந்தியா விமானம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.
தொடர்ந்து, ஏர் இந்தியா விமானத்தை வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர்.இது குறித்து
வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.