மக்களவை தேர்தல்; வாக்கு எண்ணிக்கையின்போது குண்டு வெடிப்பு -5 பேர் படுகாயம்!
வாக்கு எண்ணிக்கைத் தொடங்கும் முன்பு வெடிகுண்டு வெடித்ததில் 5 பேர் படுகாயமடைந்தனர்.
வாக்கு எண்ணிக்கை
நடப்பாண்டின் மக்களவை தேர்தல் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது.நாடு முழுவதும் வாக்குப்பதிவுகள் ஏழு கட்டங்களாக நடந்தது.இன்று தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது அதற்கான வாக்கு எண்ணிக்கை பரபரப்பாக நடைப்ட்ரு வருகிறது.
இந்த நிலையில், 2024 மக்களவை தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டுள்ள நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பகள் பாஜகவுக்கு சாதகமாக அமைந்துள்ளன என்று கருத்து கணிப்பில் தெரியவந்தது.
வெடித்த குண்டு
இதில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 21 முதல் 24 இடங்களைக் கைப்பற்றும் என்றும், திரிணமூல் காங்கிரஸ் 18 முதல் 21 இடங்களை மட்டுமே கைப்பற்றும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த சூழலில், வாக்கு எண்ணிக்கை துவங்குதற்கு சற்று முன்பு, தெற்கு 24 பர்கானாஸ், பாங்கர், சால்தபேரியாவில் நாட்டு வெடிகுண்டு வெடித்தது.
இதில் 5பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். அதில், சிலர் வெடிகுண்டுகளை தயாரித்துக் கொண்டிருந்த போது இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. காயமடைந்த ஐவரில் ஒருவர் இந்திய மதச்சார்பற்ற முன்னணியின் (ஐஎஸ்எஃப்) பஞ்சாயத்து உறுப்பினர் என்று கூறப்படுகிறது.