போலீஸ் ஜீப் மீது குண்டு வீச்சு, 2 பேர் பலி - அலறி ஓடிய மக்கள்!

United States of America Bomb Blast
By Vinothini May 26, 2023 05:07 AM GMT
Vinothini

Vinothini

in உலகம்
Report

போலீசார் ரோந்து பணியின்போது அவர்கள் சென்ற ஜீப் மீது குண்டு வீசப்பட்டு 2 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொலம்பியா

அமெரிக்கா, கொலம்பியாவின் வடக்கு சான்டாண்டர் மாகாணத்தில் உள்ள திபு நகரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

bomb-blast-in-columbia-2-dead-including-policeman

அப்போது போலீசார் சென்ற ஜீப் மீது வெடிகுண்டு வீசப்பட்டது, அதில் அந்த ஜீப் தீப்பிடித்து எரிந்தது.

இதனால் அங்கிருந்தவர்கள் பயத்தில் அலறியடித்துக் கொண்டு சிதறி ஓடினர்.

தொடர்ந்து, தீ அணைப்பு படையினர் விரைந்து சென்று மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

அதில் ஒரு போலீஸ்காரர் உட்பட 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 8 பேர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

தாக்குதல்

இந்நிலையில், அங்கு பாதுகாப்பு துறை மந்திரியான இவான் வெலாஸ்குவெஸ் திபு அன்று நகருக்குள் செல்வதற்கு முன்னர் இந்த தாக்குதல் நடந்துள்ளது.

bomb-blast-in-columbia-2-dead-including-policeman

இதனால் கிளர்ச்சி குழு இந்த காரியத்தை செய்திருக்க கூடும் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

மேலும், நாட்டின் மிகப்பெரிய கிளர்ச்சி குழுவான புரட்சிகர ஆயுதப்படையின் அதிருப்தியாளர்களும், தேசிய விடுதலைப்படையினரும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக அங்குள்ள ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.