ரோந்து கார் மீது மோதிய திருட்டு கார் - சிறுவன் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு..!
13 வயது சிறுவன் ஓட்டி வந்த கார் போலீசாரின் ரோந்து வாகனம் மீது மோதியதால் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் சிறுவன் உயிரிழந்தான்.
அமெரிக்காவின் சாண்டியாகோ மாகாணத்தின் வார்கொல்ட் பகுதியில் கார் ஒன்று திருடப்பட்டதாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இதையடுத்து தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அந்த வழியாக வந்த காரை நிறுத்த முயன்றுள்ளனர்.
ஆனால் அந்த கார் நிறுத்தாமல் அங்கு நிறுத்தப்பட்டிருந்த போலீசாரின் ரோந்து கார் மீது மோதியது. இதையடுத்து போலீசார் அந்த காரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
இதில் காரை ஓட்டி வந்த 13 வயது சிறுவன் உயிரிழந்தான். மேலும் காரில் இருந்த இரண்டு சிறுவர்கள் எந்தவித காயமுமின்றி உயிர் தப்பினர்.
இந்த கார் திருடப்பட்ட கார் என போலீசார் தெரிவித்தனர்.இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.