மர்ம கும்பல்; திமுக பிரமுகர் வீடு..2 இடங்களில் வெடிகுண்டு வீச்சு - பரபரப்பு சம்பவம்!
திமுக பிரமுகர் வீடு உள்பட 2 இடங்களில் வெடிகுண்டு வீசப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
வெடிகுண்டு வீச்சு
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர்தான் அபிஷா பிரியவர்ஷினி(33). இவரது கணவர் ஜெகன்(38). திமுக பிரமுகரான இவரது வீட்டில் மர்ம கும்பல் ஒன்று வெடிகுண்டு வீசி உள்ளது.மாலை முகமூடி அணிந்து கொண்டு 2 மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் செய்துள்ளது.

இந்த வெடிகுண்டு வீட்டின் வெளிப்புற கேட்டில் விழுந்ததால் அதிர்ஷ்ட வசமாக உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை. ஆனால், வெடித்த நாட்டு வெடி குண்டால் ஜன்னல் கண்ணாடி உள்ளிட்டவை சேதமடைந்தது.
பரபரப்பு சம்பவம்
அதே போல், அந்த கும்பல் சிறுனியம் காலனி பகுதியில் உள்ள சரண்ராஜ் என்பவரின் காரை உடைத்து விட்டு அங்கு இருந்தவர்களை கத்தியை காட்டி மிரட்டி உள்ளனர். இந்த நிலையில்,

மாமுல் கேட்டு நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
டிசம்பரில் ஜாக்போட்.. 18 மாதங்களுக்கு பின் அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி Manithan
Bigg Boss: உங்க வீட்டுல இப்படியா வளர்த்திருப்பான் உன்னையெல்லாம்? தரையில் அமர்ந்து வெடித்த விஜய் சேதுபதி Manithan