சினிமாவின் முதல் லிப்லாக்; எந்தப் படம், நடிகை தெரியுமா? வெடித்த சர்ச்சை!
சினிமாவின் முதல் முத்தக்காட்சி இடம்பெற்ற படம் குறித்துப் பார்ப்போம்.
முதல் முத்தக்காட்சி
பாலிவுட்டில் தான் முதல் முத்தக் காட்சி படமாக்கப்பட்டது. திரையில் முழு முத்தக் காட்சியில் நடித்த முதல் நடிகை தேவிகா ராணி. 92 ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் காட்சி எடுக்கப்பட்டது.
1933-ம் ஆண்டு வெளியான படம் கர்மா. முத்தக் காட்சியைக் கொண்ட ஆரம்பப் படங்களில் இதுவும் ஒன்று. இதில் படத்தின் தயாரிப்பாளரான ஹிமான்ஷு ராய்க்கு ஜோடியாக தேவிகா ராணி நடித்தார்.
கர்மா
இருவரும் அப்போது காதலித்து வந்ததாக கூறப்பட்டது. இந்த முத்தக்காட்சி கிட்டத்தட்ட நான்கு நிமிடங்கள் நீடித்தது. இருப்பினும் பல சர்ச்சை கருத்துக்களால் இந்த படம் தடை செய்யப்பட்டது.
அதன்பிறகு திரையில் நெருக்கமான காட்சிகள் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.