மாமியாரை பார்த்துதான் குடிக்க ஆசைப்பட்டேன்; ஆனால், கணவர்.. இளம்பெண் ஆதங்கம்!
தமிழா தமிழா நிகழ்ச்சியில் பெண் ஒருவர் பகிர்ந்துள்ள தகவல் கவனம் பெற்றுள்ளது.
தமிழா தமிழா
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தமிழா தமிழா. இந்த நிகழ்ச்சியின் ஆங்கர் ஆவுடையப்பன். ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான தலைப்புடன் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், புத்தாண்டையொட்டி புத்தாண்டிற்கு தன்னுடைய பார்ட்னர் இந்த தீர்மானத்தை எடுக்க வேண்டும் என லிஸ்ட் போடும் கணவன் -மனைவி என்பதாக இந்த வாரத்தின் தலைப்பு இருந்தது. அதில், பெண் ஒருவர் தன்னுடைய கணவன் சரக்கடிக்க வேண்டும்.
பெண்ணின் ஆசை
கணவனுடன் இணைந்து தானும் சரக்கடித்து கேண்டில் லைட் டின்னர், அருமையான படம் என பொழுதை கழிக்க வேண்டும். தனக்காகத்தான் அவர் குடியை விட்டார். ஆனால் தானே விரும்பினாலும் அவர் திருமணத்திற்கு பிறகு குடிப்பதில்லை. தன்னுடைய மாமியார் கேரளாவை சேர்ந்தவர் என்பதால் கிளைமேட்டிற்காக அவர் ரம் அடிப்பார்.
ஆனால் தன்னுடைய கணவர் தன்னுடைய விருப்பத்தை பூர்த்தி செய்யாமல் உள்ளார் எனத் தெரிவித்தார். இதனைக் கேட்ட ஆவுடையப்பன், ரொமான்சையும் லிக்கரையும் சேர்த்து பார்க்க வேண்டாம். கஷ்டப்பட்டு குடிப்பதை நிறுத்திய ஒரு மனிதனை மீண்டும் அதற்குள் தள்ள வேண்டாம்.
அவர் ஒரு மனிதர் என்பதால் மீண்டும் அந்த பழக்கத்தில் ஆழ்ந்துவிட்டால் மறுபடியும் அவரை திருத்துவதும் கடினமாகிவிடும். மாமியாரை பார்த்து குடிக்க ஆசைப்பட்டதையும் குறிப்பிட்ட அவர், அவரை பார்த்து ஆசைப்பட அதிகமான விஷயங்கள் இருக்கலாம். இது அதுவல்ல என அறிவுரை வழங்கினார். இதுதொடர்பான வீடியோ தற்போது கவனம் பெற்றுள்ளது.