பிரபல காமெடி நடிகர் சதீஷ் ஷா காலமானார்

Bollywood Mumbai Death
By Sumathi Oct 25, 2025 05:58 PM GMT
Report

நடிகர் சதிஷ் ஷா உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். பிரபல பாலிவுட் நடிகர் சதீஷ் ஷா காலமானர்.

சதிஷ் ஷா மறைவு

அவருக்கு வயது 71. இவர் சிறுநீரகம் தொடர்பான பிரச்னைகளால் அவதிப்பட்டு வந்தார். சமீபத்தில் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி மும்பையில் உள்ள இந்துஜா மருத்துவமனையில் இன்று காலமானார்.

satish shah

இறுதி சடங்கு நாளை( அக்டோபர் 26) நடைபெறும் என்று அவருடைய மேலாளர் தெரிவித்துள்ளார். 1984 ஆம் ஆண்டு வெளியான நகைச்சுவைத் தொடரான யே ஜோ ஹை ஜிந்தகி மூலம் சதிஷ் ஷா புகழ் பெற்றார்.

மகன் இறப்பு; மோசமான பாரதிராஜா நிலை - இப்போ எப்படி இருக்கிறார்?

மகன் இறப்பு; மோசமான பாரதிராஜா நிலை - இப்போ எப்படி இருக்கிறார்?

நடிகர்கள் இரங்கல்

55 வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். 'ஹம் சாத்-சாத் ஹைன்', 'மைன் ஹூன் நா', 'கல் ஹோ நா ஹோ', 'கபி ஹான் கபி நா',

பிரபல காமெடி நடிகர் சதீஷ் ஷா காலமானார் | Bollywood Comedy Actor Satish Shah Passes Away

'தில்வாலே 'துல்ஹானியா லே ஜாயேங்கே' மற்றும் 'ஓம் சாந்தி ஓம்', 'ஹம் ஆப்கே ஹைன் கோன்' போன்ற படங்கள் அவர் நடித்ததில் பிரபலம். அவரது மறைவுக்கு பாலிவுட் நடிகர்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.