பிரபல காமெடி நடிகர் சதீஷ் ஷா காலமானார்
நடிகர் சதிஷ் ஷா உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். பிரபல பாலிவுட் நடிகர் சதீஷ் ஷா காலமானர்.
சதிஷ் ஷா மறைவு
அவருக்கு வயது 71. இவர் சிறுநீரகம் தொடர்பான பிரச்னைகளால் அவதிப்பட்டு வந்தார். சமீபத்தில் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி மும்பையில் உள்ள இந்துஜா மருத்துவமனையில் இன்று காலமானார்.

இறுதி சடங்கு நாளை( அக்டோபர் 26) நடைபெறும் என்று அவருடைய மேலாளர் தெரிவித்துள்ளார். 1984 ஆம் ஆண்டு வெளியான நகைச்சுவைத் தொடரான யே ஜோ ஹை ஜிந்தகி மூலம் சதிஷ் ஷா புகழ் பெற்றார்.
நடிகர்கள் இரங்கல்
55 வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். 'ஹம் சாத்-சாத் ஹைன்', 'மைன் ஹூன் நா', 'கல் ஹோ நா ஹோ', 'கபி ஹான் கபி நா',

'தில்வாலே 'துல்ஹானியா லே ஜாயேங்கே' மற்றும் 'ஓம் சாந்தி ஓம்', 'ஹம் ஆப்கே ஹைன் கோன்' போன்ற படங்கள் அவர் நடித்ததில் பிரபலம். அவரது மறைவுக்கு பாலிவுட் நடிகர்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சி...! எதிர்பார்ப்புகளை அதிகரித்த உள்நாட்டுச் சந்தை விலை IBC Tamil
தன் மகளைப் பாதுகாக்க முடியவில்லை: அத்துமீறலுக்கு உள்ளான அனுராதபுரம் பெண் வைத்தியரின் தந்தை கண்ணீர் மல்க சாட்சி IBC Tamil
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் இல்லக் காணி மதிலில் காட்சிபடுத்தப்பட்ட பதாகை கிழித்தெறிப்பு IBC Tamil
உகண்டாவில் பதுக்கப்பட்ட பணத்தை கொண்டுவாருங்கள்! சிறிலங்கன் ஏர்லைன்ஸ் தொடர்பில் கடும் வாக்குவாதம் IBC Tamil