காதலரால் இந்த நிலையா? விபச்சாரத்திற்கு தள்ளப்பட்ட பிரபல நடிகை!
பிரபல நடிகை விமி குறித்த பல அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை விமி
பாலிவுட்டில் கொடிக்கட்டி பறந்தவர் நடிகை விமி. ஆப்ரூ, ஹம்ராஸ், படாங்கா ஆகியவை விமி நடித்த படங்களில் முக்கியமானவை. சுனில் தத், சசி கபூர், ராஜ் குமார் உள்ளிட்டோருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
60களிலேயே படத்திற்கு 3 லட்சம் சம்பளமாக பெற்றுள்ளார். இவர் திருமணமாகி 2 குழந்தைகளுக்கு பின்னே திரையுலகில் அறிமுகமானார். கணவர் சிவ் அகர்வாலை பிரிந்த பிறகு வேறு ஒருவருடன் ரிலேசன்ஷிப்பில் இருந்திருக்கிறார்.
ரசிகர்கள் ஷாக்
அவர் நடிகை விமியை விபச்சாரத்தில் தள்ளியதாக கூறப்படுகிறது. மேலும், மதுவுக்கும் அடிமையாகியுள்ளார். தொடர்ந்து, 34வது வயதில் கல்லீரல் பிரச்னையால் கடுமையாக பாதிக்கப்பட்டு மரணமடைந்தார்.
அப்போது அவரது இறுதிச்சடங்குகளை செய்ய ஒருவரும் முன்வரவில்லை. அவரது உடல் சுடுகாட்டுக்கு கைவண்டியில் எடுத்துச்செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தச் செய்தி ரசிகர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.