சிம்புவுக்கு ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை - பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
சிம்பு நடிக்கும் அடுத்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகை இணையப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
STR48
நடிகர் சிலம்பரசன் தற்போது, தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில், கமல்ஹாசன் தயாரிப்பில் ’STR48’ படத்தில் பிஸியாக இருக்கிறார்.
இவரது சினிமா கரியரில் மிகப்பெரிய பட்ஜெட்டாக 100 கோடி ரூபாய் தயாரிப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.
இந்தப் படத்தின் பிளாஷ்பேக்கில் சிம்பு போர் வீரனாக நடிப்பதாகவும் அதற்காகத்தான் தற்போது நீண்ட தலைமுடியுடன் காணப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
பாலிவுட் நடிகை
இந்நிலையில், இந்தப் படத்தின் ஷூட்டிங் தற்போது தொடங்கியுள்ளது. மேலும் இதில், பிரபல பாலிவுட்டின் டாப் நடிகையான தீபிகா படுகோன் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இதில் அவரை நடிக்க வைத்தால் பான் இந்திய அளவில் எடுத்துப் போக படத்திற்கு கூடுதல் ப்ளஸ் பாயின்ட்டாக இருக்கும் என திட்டமிட்டுள்ளனர்.
சிம்புவுடன் தீபிகா இணைந்து நடிப்பது உறுதியானால், இதுகுறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் படக்குழு தரப்பில் இருந்து வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
இவர் ’கோச்சடையான்’ படத்திற்குப் பிறகு தமிழில் எந்தப் படங்களும் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை ஆதாரமாக உலகை உலுக்கிய No fire zone தமிழில் (கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும்) IBC Tamil
