நடிகர் சிம்புவுக்கு கல்யாணம்..! பெண் யார் தெரியுமா? - டி.ராஜேந்தர் விளக்கம்

Silambarasan T Rajendar Nayanthara Tamil Cinema Marriage
By Thahir Dec 07, 2022 05:48 AM GMT
Report
570 Shares

நடிகர் சிம்பு திருமணம் குறித்த கேள்விக்கு அவரது தந்தை டி.ராஜேந்தர் விளக்கம் அளித்துள்ளார்.

சினிமாவில் அறிமுகம் 

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சிலம்பரசன் தனது அசாத்திய திறமையால் பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் ஆதரவை பெற்றார்.

2002ல் டி.ராஜேந்தர் இயக்கத்தில் வெளியான காதல் அழிவதில்லை திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். இவருக்கு 2006 ஆம் ஆண்டு தமிழக அரசு இவருக்கு கலைமாமணி விருது அளித்து கௌரவித்தது.

காதல் கிசு கிசு 

இவர் பல முன்னணி படங்களில் நடித்து வந்த நிலையில் நடிகைகளுடன் காதல் என்று கிசு கிசுக்கப்பட்டது. முதலில் நயன்தாராவை காதலித்து வந்ததாகவும் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டதாக பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.

நடிகர் சிம்புவுக்கு கல்யாணம்..! பெண் யார் தெரியுமா? - டி.ராஜேந்தர் விளக்கம் | Actor Simbu Got Married Do You Know Who The Girl

இதையடுத்து நடிகை ஹன்சிக்காவுடன் காதல் ஏற்பட்டுள்ளதாக கிசு கிசுக்கப்பட்ட நிலையில் அது குறித்தான தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.

திருமணம் எப்போது? 

இந்த நிலையில் நடிகர் சிம்புக்கு எப்போது திருமணம் என்று செய்தியாளர்கள் டி.ராஜேந்தரரிடம் கேள்வி எழுப்பிய போது, என் மகனுக்கு பிடித்த பெண்ணை நான் தேர்ந்தெடுப்பதை விட, என் மனைவி உஷா ராணி தேர்ந்தெடுப்பதை விட என் மகனுக்கு பிடித்த மணமகளை, அந்த குலமகளை, அந்த கலைமகளை, என் இல்லத்திற்கு ஏற்ற திருமகளை இறைவன் தான் தேர்ந்தெடுத்து கொடுக்க வேண்டும்.

நடிகர் சிம்புவுக்கு கல்யாணம்..! பெண் யார் தெரியுமா? - டி.ராஜேந்தர் விளக்கம் | Actor Simbu Got Married Do You Know Who The Girl

என்னை யார் பார்த்தாலும் உங்கள் மகனுக்கு எப்போது திருமணம் என்று கேட்கிறார்கள். இறைவன் அருளால் நடக்க வேண்டும். தமிழக ரசிகர்களின் அன்பால் திருமணம் நடக்க வேண்டும் என்று தெரிவித்தார்.