முன்னாடி ஹோட்டல்'ல அந்த வேலை - இப்போ சம்பளம் 50 லட்ச -நடிகை வெளிப்படை
சினிமா வாய்ப்புகள் இல்லாத காலத்தில் தான் பட்ட கஷ்டத்தை நடிகை ஒருவர் பகிர்ந்து கொண்டுள்ளார்.
ராக்கி சாவந்த்
கடந்த 1997-ஆம் ஆண்டு பாலிவுட் திரையில் கவர்ச்சி நடிகையாக அறிமுகமானவர் ராக்கி சாவந்த்.

2009-ஆம் ஆண்டு ஒளிபரப்பான சுயம்வரம் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமடைந்த இவர், கடந்த 2019-ஆம் ஆண்டு வெளிநாட்டு வாழ் இந்தியரான ரித்தேஷ் சிங்என் என்பவரை மணந்து 2 ஆண்டிற்குள் அவரிடம் இருந்து விவகாரத்து பெற்றார்.

பின்னர், கடந்த 2022-ஆம் ஆண்டு தன்னை விட 11 வயது குறைந்த அடில்கான் துரானி என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
50 ரூபாய்க்கு...
இவர் சினிமாவில் பிரபலமாவதற்கு முன்பு ஹோட்டல் ஒன்றில் தினமும் 50 ரூபாய்க்கு வேலை செய்யும் நிலையில் இருந்துள்ளார். சிறு வயதில் இருந்தே சினிமாவில் ஆசை இருந்ததால், குடும்பத்தின் எதிர்ப்பையும் மீறி சினிமாவிற்கு வந்துள்ளார்.

ஆரம்பத்தில், வாய்ப்பிற்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டுள்ள ராக்கி சாவந்த், பின்னர் மெல்ல வாய்ப்புகள் வர அதனை சரியாக பயன்படுத்து கொண்டுள்ளார். 50 ரூபாயில் வாழக்கையை துவங்கிய ராக்கி சாவந்த் தற்போது மாத வருமானமாக சுமார் 50 லட்சம் வரை சம்பாதிக்கிறாராம்.
உயர்கல்வி வாய்ப்புகளை தவறவிட்ட மாணவர்களுக்கு வட்டியில்லா கடன்! அரசாங்கத்தின் புதிய திட்டம் IBC Tamil