முடிவுக்கு வரும் 37 வருட திருமண வாழ்க்கை - 61 வயதில் விவாகரத்து பெரும் நடிகர் கோவிந்தா
நடிகர் கோவிந்தா விவாகரத்து பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் கோவிந்தா
சினிமா மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் இடையேயான விவாகரத்து சமீபத்தில் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் கிரிக்கெட் வீரர் யுவேந்திர சாஹல் விவாகரத்து பெறுவதாக அறிவித்தார்.
தற்போது பிரபல பாலிவுட் நடிகர் கோவிந்தா விவாகரத்து பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. பாலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வந்த நடிகர் கோவிந்தா, தமிழில் ரம்பா, ஜோதிகா, லைலா நடித்த த்ரீ ரோஸஸ் படத்தில் மெய்யானதா, பொய்யானதா பாடலில் நடனம் ஆடி இருப்பார்.
விவாகரத்து
நடிப்பதோடு மட்டுமின்றி அரசியலில் இறங்கிய இவர், காங்கிரஸ் சார்பில் எம்.பி ஆக இருந்துள்ளார். தற்போது சிவசேனா கட்சியில் இணைந்து தீவிர அரசியலில் ஈடுபட்டு வருவதால் படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டார்.
நடிகர் கோவிந்தாவிற்கு 1987 ஆம் ஆண்டு சுனிதா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர் இந்த திருமணத்தை சில வருடங்களாக ரகசியமாக வைத்திருந்தார். இவர்களுக்கு டீனா மற்றும் யஷ்வர்தன் அஹுஜா என்ற 2 குழந்தைகள் உள்ளனர்.
சமீபகாலமாக பொது நிகழ்வுகளில் தனியாக கலந்து கொள்ளும் சுனிதா, "தற்போது கோவிந்தாவுடன் ஒரே வீட்டில் வசிக்கவில்லை. அவர் பெரும்பாலும் நண்பர்களுடனே நேரத்தை செலவிட விரும்புவார். என கூறினார். இந்நிலையில் இருவரும் விவாகரத்து பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இது குறித்து இருவரும் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.