அண்டார்டிகாவில் பயணிகள் விமானம் தரையிறங்கி உலக சாதனை - அதுவும் பனி ஓடுபாதையில்!

Norway Flight World
By Jiyath Nov 19, 2023 03:45 AM GMT
Report

அண்டார்டிகாவில் பயணிகள் விமானம் ஒன்று தரையிறங்கி உலக சாதனை படைத்துள்ளது.  

அண்டார்டிகாவில் விமானம்

உலகிலேயே மர்மமான ஒரு பகுதி என்றால் அது அண்டார்டிகா கண்டம்தான். முழுக்க முழுக்க பனியால் சூழப்பட்டுள்ள இந்த கண்டம் மனிதர்கள் வசிக்க முடியாத நிலப்பரப்பாகும். அண்டார்டிகாவில் தோராயமாக 2.16 கி.மீ உயரத்திற்கு பனி அடர்த்தியாக இருக்கிறது.

அண்டார்டிகாவில் பயணிகள் விமானம் தரையிறங்கி உலக சாதனை - அதுவும் பனி ஓடுபாதையில்! | Boeing 787 Dreamliner Land On Antarctica

அதற்கு கீழ்தான் மண், மணல் எல்லாம் இருக்கிறது. எனவே, ஆய்வுக்காக மட்டுமே இந்த பகுதியை பயன்படுத்தி வருகிறார்கள். பல லட்சம் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த உயிரினங்கள், தாவரங்களின் படிமங்கள் இங்கு பத்திரமாக பாதுகாக்கப்படுகிறன. பல்வேறு நடுகை சேர்ந்த விஞ்ஞானிகள் இங்கு தங்கியிருந்து ஆய்வு செய்து வருகிறார்கள்.

அவர்களை அங்கு அழைத்துச் செல்லவும் திரும்பக் கொண்டு வரவும் பெரும்பாலும் ராணுவ விமானங்கள் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் வரலாற்றில் முதல் முறையாக, பயணிகள் விமானம் ஒன்று அண்டார்டிகாவில் தரையிறங்கி உலக சாதனை படைத்திருக்கிறது.

பள்ளி பேருந்தில் பழக்கம்; 14வயது மாணவனுடன் 35வயது பெண் பல முறை பாலியல் உறவு - அதிர்ச்சி!

பள்ளி பேருந்தில் பழக்கம்; 14வயது மாணவனுடன் 35வயது பெண் பல முறை பாலியல் உறவு - அதிர்ச்சி!

நிறுவனம் சாதனை

கடந்த 15ம் தேதி "நார்ஸ் அட்லாண்டிக் ஏர்வேஸ்" விமான நிறுவனத்தின் "போயிங் 787 ட்ரீம்லைனர்" விமானத்தை அண்டார்டிகாவின் 'குயின் மவுட் லேண்ட்' எனும் இடத்தில் விமானிகள் தரையிறக்கி சாதனை படைத்துள்ளனர்.

அண்டார்டிகாவில் பயணிகள் விமானம் தரையிறங்கி உலக சாதனை - அதுவும் பனி ஓடுபாதையில்! | Boeing 787 Dreamliner Land On Antarctica

நார்வே நாட்டிலிருந்து, நார்வே போலார் இன்ஸ்டிடியூட் விஞ்ஞானிகள் உள்பட 45 விஞ்ஞானிகள் மற்றும் ஆய்வுக்கு தேவையான பொருட்கள், மருந்துப் பொருட்கள், உணவு என 12 டன் எடையுள்ள பொருட்களுடன் இந்த விமானம் புறப்பட்டு அண்டார்டிகாவில் தரையிறங்கியுள்ளது. விமானம் தரையிறங்கிய நீல பனி ஓடுபாதையானது கிட்டத்தட்ட 3 கி.மீ நீளம் மற்றும் 200 அடி அகலம் என வழக்கமான ரன்வே போன்று காணப்பட்டாலும், பனிக்கட்டி என்பதால் விமானத்தை தரையிறக்குவது சவாலான பனி ஆகும்.

கட்டுப்பாட்டை இழந்தால் விமானம் சறுக்கிக்கொண்டு பாதையைவிட்டு விலகி விபத்துக்குள்ளாகிவிடும். இந்த சவாலான சூழ்நிலைக்கு மத்தியிலும் விமானத்தை பத்திரமாக தரையிறக்கிய சாதனை படைத்துள்ளனர். இந்த சாதனையின் மூலம் இனி அண்டார்டிகாவிலும் பயணிகள் விமானத்தை தரையிறக்க முடியும் என்கிற நிலை உருவாகியுள்ளது.