வெறும் கிராம்பு மட்டும் போதும் - உடல் எடையை குறைக்கலாம்!! எப்படி'னு தெரியுமா?
தற்போதைய இளம் தலைமுறையினர் உடல் எடை அதிகரித்து பெரும் பெரிதாக தவிக்கிறார்கள்.
உடல் எடை
பலருக்கும் உடல் எடையை கட்டுக்கோப்பில் வைத்து கொள்ளவேண்டும் என்ற எண்ணம் எப்போதும் மேலோங்கியே இருக்கும். IT தலைமுறையில், பல மணி நேரம் உட்கார்ந்தே வேலை செய்து வரும் காரணத்தால், உடல் எடை இளம் வயதிலேயே அதிகரித்து விடுகிறார்கள்.
உடனே உடற்பயிற்சி மேற்கொண்ள்வது, உடல் எடை குறைப்பதற்கான டயட் இருப்பது என பல வித முறைகளையும் கையாளுகிறார்கள். இருப்பினும் பலர் உடல் எடையை குறைக்க முடியாமல் தவித்து வருகிறார்கள்.
அப்படி இருக்கும் நிலையில், மூலிகையான கிராம்பு உடல் எடை குறைப்பதில் முக்கிய பணியாற்றும் என கூறப்படுகிறது. கிராம்பில் இரும்பு, மெக்னீசியம், முதல் பலவகையான நார்சத்துக்களும் அதிகளவில் இருக்கின்றது. அதே போல, பல வைரஸ் பாதிப்புகளையும் கட்டுப்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.
கிராம்பு
காலையில் வெறும் வயிற்றில் இரவு முழுவதும் 3 அல்லது 4 கிராம்புகளை கொண்ட ஊறவைத்த ஒரு டம்ளர் நீரை குடிக்க வேண்டும். இதன் மூலம் உடலில் ஊட்டச்சத்துக்கள் அதிகரித்து உடலின் எடை வளர்ச்சியை குறைக்கும் என கூறப்படுகிறது.
அப்படியில்லையென்றால் 3 அல்லது 4 கிராம்புகளை பொடியாக்கி உணவிலும் சேர்த்து கொள்ளலாம் என கூறப்படுகிறது.
ஆனால் அதே நேரத்தில், கிராம்பு சூடு தன்மை கொண்டதால், இதனை அதிகமாக எடுத்து கொண்டால், அது குடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு உண்டாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.