பெண்களை கொன்று பன்றிகளுக்கு இரையாக்கிய பண்ணையாளர் - பகீர் சம்பவம்!
கறுப்பின பெண்களை சுட்டுக்கொன்று பன்றிகளுக்கு பண்ணையாளர் இரையாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன பிரச்சினை
தென்னாப்ரிக்கா, வெள்ளை இன பண்ணையாளருக்கு சொந்தமான பண்ணை ஒன்று உள்ளது. இங்கு தூக்கி எறியப்படும் பொருள்களை எடுத்துவர அவ்வப்போது
அப்பகுதியில் வசிக்கும் கறுப்பின மக்கள் யாருக்கும் தெரியாமல் சென்று எடுத்துவருவது வழக்கமாக இருந்துள்ளது. அந்த வகையில், மரியா (44) மற்றும் லொகாடியா (35) இரண்டு கறுப்பின பெண்கள் திரும்பவில்லை.
பெண்கள் கொடூர கொலை
அவர்கள் அந்தப் பண்ணைக்குள்ளேயே கொலை செய்யப்பட்டு, அங்கிருந்த பன்றிகளுக்கு உணவாக்கப்பட்ட கொடூர சம்பவம் தெரியவந்துள்ளது. இந்நிலையில் இதுகுறித்து அறிந்த போலீஸார் நடத்திய விசாரணையில், இரண்டு பெண்களின் உடல்களும் பன்றிகளால் சாப்பிட்டு மிச்சம் வைக்கப்பட்டு, அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பண்ணையின் உரிமையாளர், அத்துமீறி யார் பண்ணைக்குள் நுழைந்தாலும் சுட்டுக் கொல்லும்படி தொழிலாளர்களுக்கு உத்தரவிட்டிருந்ததும், அம்பலமாகியுள்ளது.
இந்த சம்பவத்தில், பண்ணை உரிமையாளர் மற்றும் அவரது இரண்டு தொழிலாளர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளனர்.
தற்போது, தங்களுக்கு நீதி வேண்டி நீதிமன்றம் அருகே ஏராளமான கறுப்பின பெண்கள் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.