கும்பமேளாவில் பேமஸான மோனாலிசா; வைர நெக்லஸ் பரிசளித்த பிரபலம் - யாரு பாருங்க!
மோனாலிசாவுக்கு பிரபலம் ஒருவர் வைர நெக்லஸை பரிசளித்துள்ளார்.
மோனாலிசா
கும்பமேளாவில் ருத்ராட்ச மாலைகளை விற்க வந்த மோனலிசா என்ற பெண் படு வைரலானார். அவரது கண்கள் குறித்து பலரும் புகழ்ந்து பேசினார்கள்.ஆனால் பல இன்னல்களுக்கும் ஆளானார்.
இவர் தங்கியிருந்த கூடாரத்திற்குள் புகுந்த சில இளைஞர்கள் வற்புறுத்தி செல்ஃபி எடுத்திருக்கின்றனர். இதனை தட்டிக்கேட்ட இவரது சகோதரரும் கடுமையாக தாக்கப்பட்டிருக்கிறார். தொடர்ந்து இவரை சினிமாவில் நடிக்க வைப்பதாக இயக்குநர் ஒருவர் பொதுவெளியில் அறிவித்தார்.
இந்நிலையில், கோழிக்கோட்டில் உள்ள செம்மனூர் நகைக்கடை திறப்பு விழாவில் மோனாலிசா கலந்து கொள்வார் என ஏற்கனவே, பாபி செம்மனூர் தெரிவித்திருந்தார். அதேபோல் பிப்ரவரி 14 ஆம் தேதி நடைபெற்ற கடை திறப்பு விழாவில் மோனாலிசா கலந்து கொண்டார்.
வைர நெக்லஸ் பரிசு
இவரை நேரில் பார்க்க மக்கள் கூட்டம் அதிகம் திரண்டு இருந்தது. அப்போது அவருக்கு நகைக்கடை உரிமையாளர் பாபி செம்மனூர் வைர நெக்லஸ் ஒன்றைப் பரிசாக கொடுத்துள்ளார். தொடர்ந்து பேசிய பாபி செம்மனூர், கும்பமேளாவில் ஃபேமஸான மோனாலிசா கடை திறப்பு விழாவிற்கு வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
மோனாலிசா இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக மலையாளம் கற்றுக் கொண்டு உள்ளார். விரைவில் மலையாளம் நன்றாக பேசுவார். நாங்கள் இணைந்து மீண்டும் கும்பமேளாவிற்கு செல்ல உள்ளோம் எனத் தெரிவித்துள்ளார். பாபி செம்மனூர் மீது ஏற்கனவே நடிகை ஹனி ரோஸ் பாலியல் புகார் ஒன்றை அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.