ஆற்றில் சென்ற படகு.. திடீரென கவிழ்ந்ததில் பலர் மாயம் - 26 பேர் பலி!
திடீரென ஆற்றில் சென்ற படகு கவிழ்ந்ததில் 26 பேர் பலியான சமபவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
படகில் பயணம்
நைஜீரியா நாட்டின் நைஜர் மாகாணம், மொக்வா நகரில் உள்ள ஆற்றில் நேற்று 100 பேர் படகில் பயணம் மேற்கொண்டனர். இவர்கள் அனைவரும் பக்கத்துக்கு நகரத்தில் விவசாய பணிக்காக படகில் பயணம் செய்தனர்.
அப்பொழுது அவர்கள் பயணம் செய்துகொண்டிருந்த படகு திடீரென நிலைதடுமாறி ஆற்றில் கவிழ்ந்தது. இதில் பயணம் செய்தவர்கள் ஆற்றில் விழுந்து காணாமல் போனார்.
மீட்பு பணி
இந்நிலையில், இந்த விபத்து குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆற்றில் சிக்கித் தவித்த 30 பேரை உயிருடன் மீட்டனர்.
இந்த விபத்தில் 26 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் பலர் மாயமான நிலையில், காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.