கோவிலுக்கு சென்ற பக்தர்கள் - ஆற்றில் மூழ்கி 24 பேர் பரிதாப பலி!
ஆற்றில் படகு கவிழ்ந்ததில் 24 பேர் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமாவாசை
வங்கதேசத்தில் உள்ள பஞ்சகார் மாவட்டத்தில், பூதேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. நேற்று அமாவாசையை முன்னிட்டு ஏராளமான மக்கள், இந்த கோயிலில் வழிபாடு செய்ய சென்றனர்.
அப்போது, கொரோடா என்ற ஆற்றில் படகு மூலமாக சென்றுள்ளனர். அதில், அதிக பாரம் காரணமாக படகு திடீரென கவிழ்ந்தது. இதில், 24 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில், 12 பேர் பெண்கள் மற்றும் 8 பேர் சிறுவர்கள்.
தீவிர தேடுதல்
மேலும் படகில் இருந்த பலர் காணவில்லை. அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்தது. ஆனால், அதற்குள் இருட்டி விட்டதால் மீட்பு பணி நிறுத்தப்பட்டது. தொடர்ந்து ஆற்றில் வெள்ளம் சென்று கொண்டிருப்பதால்,
பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என கூறப்படுகிறது. மீதம் இருப்பவர்களை தேடும் பணி மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.