தீயாய் பரவிய காலரா? பீதியில் அலறி ஓடிய மக்கள் - படகு கவிழ்ந்ததில் 90 பேர் உயிரிழப்பு!
படகு கவிழ்ந்த விபத்தில் 90க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பரவிய வதந்தி
ஆப்பிரிக்காவின் மொசாம்பிக் என்னும் உலகின் மிக ஏழ்மையான நாட்டில் தற்போது காலரா நோய் தீவிரமாகியுள்ளது என்ற வதந்தி பரவி வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள பெரும்பாலான மக்கள் பீதியில் தங்களது நிலப்பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்து வருகினற்னர்.
அதனால் ஒரு கோரசம்பவம் அரங்கேறியுள்ளது.மொசாம்பிக்கின் வடக்கு கடற்கரை மாநிலமான நம்புலாவிலிருந்து சுமார் 130 பேரை ஏற்றிக்கொண்டு மீன்பிடிப் படகு ஒன்று புறப்பட்டுள்ளது.
அந்த படகில் அளவுக்கு அதிகமான மக்கள் ஏறி பயணித்துள்ளனர். இதனால் அந்த படகு எடை தாங்காமல் சென்றுகொண்டிருந்தபோது நடுக்கடலில் கப்பல் மூழ்கத் தொடங்கியிருக்கிறது.
90 பேர் உயிரிழப்பு
இந்த விபத்தில் இதுவரை 91 பேர் இறந்திருப்பதாக அதிகாரப்பூர்வத் தகவல் கிடைத்திருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக பேசிய நம்புலா மாநிலச் செயலாளர் ஜெய்ம் நெட்டோ,
படகில் கூட்டம் அதிகமாக இருந்ததாலும், பயணிகளை ஏற்றிச் செல்வதற்குப் பொருத்தமில்லாமல் இருந்ததாலும் படகு மூழ்கியதாக அறிகிறோம்.பல குழந்தைகள் உட்பட 91 பேர் உயிரிழந்துள்ளனர்.
மீட்புப் பணியாளர்கள் ஐந்து பேரை உயிருடன் மீட்டிருக்கின்றனர். பலரைத் தேடி வருகிறோம். ஆனால் கடல் நிலைமைகள் மீட்புப்பணியைக் கடினமாக்குகிறது. படகு விபத்துக்கான காரணங்களைக் கண்டறிய விசாரணைக் குழு ஒன்று செயல்பட்டு வருகிறது"என்று தெரிவித்திருக்கிறார்.