கல்யாணத்திற்கு சென்று திரும்பிய விருந்தினர்கள் - படகு கவிழ்ந்து 106 பேர் பலியான சோகம்!

Nigeria Death
By Sumathi Jun 15, 2023 06:52 AM GMT
Report

திருமணத்திற்கு சென்று திரும்பிய போது படகு கவிழ்ந்த விபத்தில் 106 பேர் பலியாகியுள்ளனர்.

படகு விபத்து 

நைஜீரியா, வடக்கே உள்ள நைஜர் மாகானத்தில் எக்போடி என்ற கிராமம் உள்ளது. அங்கு ஒரு வீட்டில் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கிராமத்தின் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமானோர் பங்கேற்றனர்.

கல்யாணத்திற்கு சென்று திரும்பிய விருந்தினர்கள் - படகு கவிழ்ந்து 106 பேர் பலியான சோகம்! | 106 Peoples Died For Boat Capsizes In Nigeria

தொடர்ந்து, திருமணம் முடிந்து 300க்கும் மேற்பட்டோர் ஒரு படகில் தங்களது சொந்த ஊருக்கு திரும்பி வந்துக் கொண்டிருந்தனர். மேலும், சிலர் அதில் தங்களது இருசக்கர வாகனத்தையும் எடுத்து வந்திருந்தனர்.

 106 பேர் பலி

அப்போது அதிக பளு காரணமாக திடீரென படகு ஆற்றில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் சிறுவர்கள் உட்பட மொத்தம் 106 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதனையடுத்து, தகவலறிந்து வந்த மீட்புக் குழுவினர் சுமார் 100க்கு மேற்பட்டவர்களை மீட்டுள்ளனர்.

கல்யாணத்திற்கு சென்று திரும்பிய விருந்தினர்கள் - படகு கவிழ்ந்து 106 பேர் பலியான சோகம்! | 106 Peoples Died For Boat Capsizes In Nigeria

மேலும், பலரை தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.